கோவில்களில் மினி ைஹமாஸ் விளக்கு நாராயணசாமி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
புதுச்சேரி: சட்டசபை மானிய கோரிக்கையின் போது, நாராயணசாமி எம்.எல்.ஏ., பேசியதாவது:
முத்துப்பிள்ளைபாளையம், அரும்பார்த்தபுரம் மேல்நிலை குடிநீர் தொட்டியை மீண்டும் கட்ட வேண்டும். பிச்சவீரன்பேட் பகுதியில், பாதாள சாக்கடை வசதி செய்தபின், பாதாள சாக்கடை திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
முத்துப்பிள்ளைபாளையம், வசந்தம் நகர், திருக்குறளார் நகர் வழியாக செல்லும் வாய்க்காலில் சிமெண்ட் சிலாப் அமைக்க வேண்டும். சிவசக்தி நகர், எஸ்.எம்.எஸ்., நகர் பகுதிகளில் சாலை வசதி இல்லை. நகராட்சி மூலம் இரண்டு லோடு மண் கொண்டு வரப்பட்டது. நிதி பற்றாக்குறையால் சாலை பணியை நிறுத்தி விட்டதாக கூறுகின்றனர்.
எனவே நகராட்சிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். கோவில் பகுதிகளில் மினி ைஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும். முத்துபிள்ளைபாளையம் ஆரம்ப சுகாதர நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். மூலகுளம் முதல் அரசு பொதுமருத்துவமனை வரை டெம்போ இயக்க வேண்டும். அரும்பார்த்தபுரம், மூலகுளம், உழவர்கரை அரசுப் பள்ளிகளில் மதில் சுவர் அமைக்க வேண்டும். கம்பன் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பார்மசிஸ்ட் நியமிக்க வேண்டும். மேரி உழவர்கரையில் மீண்டும் தபால் நிலையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
தொடரை வென்றது இங்கிலாந்து: பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வி
-
'கவுன்டி' அணியில் அகிப் நபி: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக
-
கிழக்கு மண்டல அணி அபாரம்: துலீப் டிராபி அரையிறுதியில்
-
இந்திய அணியில் இடம்: மனம் திறக்கிறார் சூர்யகுமார்
-
ஜெர்மனி மீண்டும் சாம்பியன்: உலக கோப்பை ஹாக்கியில் கலக்கல்
-
பெடரருக்கு கவுரவம்: 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம்