விளையாட்டு, உடற்பயிற்சி அன்றாட வாழ்க்கையின் அங்கம்; முதல்வர் விஜய் அறிவுரை
சென்னை: இளம்தலைமுறையினர் விளையாட்டையும், உடற்பயிற்சியையும் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வளர்த்துக் கொள்ளவேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த வீரரும், உலகளவில் அபார சாதனை படைத்தவருமான மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடும் இந்நாளில், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
விளையாட்டு, பதக்கங்களை வெல்வதற்கு மட்டுமல்ல; ஒழுக்கம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, குழு உணர்வு, ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த களமாகவும் திகழ்கிறது. ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான வாழ்க்கைக்கு உடல்தகுதி மிக அவசியம். இளம்தலைமுறையினர் விளையாட்டையும், உடற்பயிற்சியையும் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக வளர்த்துக் கொள்ளவேண்டும்.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி, வெற்றிகளைக் குவித்து, இந்தியாவின் மூவர்ணக் கொடியை மேலும் உயரத்தில் பறக்கச் செய்திட இந்நாளில் வாழ்த்துகிறேன். விளையாட்டில் வளர்வோம்; வெற்றியில் மிளிர்வோம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
ராத்திரியில் மப்பூ ஏத்திட்டு கவுந்து படுத்துகஙோங்கன்னு சொன்னவருதானே இவரூஊஊ.மேலும்
-
இருண்டு போயிருந்த...முதியோரின் வாழ்வில் ஒளி!
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்