ஆர்.எஸ்.மங்கலம் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு புத்தகம் இல்லை: புதிய வாடிக்கையாளர் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு புத்தகம் இல்லாததால் புதிய சேமிப்பு கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் மையப்பகுதியாக ஆர்.எஸ்.மங்கலம் உள்ளது. இதனால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும், அருகிலுள்ள சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களும் அதிகளவில் இங்கு சேமிப்பு கணக்கு துவங்கி வரவு, செலவு செய்கின்றனர்.

இந்திய அஞ்சல் துறையில் பொதுமக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு வகையான கணக்குகள் மற்றும் சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கால வைப்பு நிதி கணக்கு, பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு, மாதாந்திர வருமான திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அரசு பணியாளர்களின் போஸ்ட் லைப் இன்சூரன்ஸ், பி.பி.எப்., கணக்கு , பள்ளி குழந்தைகள் காலர்ஷிப் பெறுவதற்கு கணக்கு என பல்வேறு கணக்குகள் துவங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆர்.எஸ்.மங்கலம் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு துவங்குபவர்களுக்கு வழங்க வேண்டிய சேமிப்பு கணக்கு புத்தகம் ஸ்டாக் இல்லாததால் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு கணக்கு துவங்க முடியாமல் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ஊழியர்கள் கூறுகையில், சேமிப்பு கணக்கு புத்தகம் இருப்பு இல்லாததால், இரண்டு வாரத்துக்கும் மேலாக புதிய கணக்கு துவங்கிய ஏராளமானோருக்கு சேமிப்பு புத்தகம் வழங்க முடியவில்லை என்றனர்.

---

Advertisement