இந்திய அணியில் இடம்: மனம் திறக்கிறார் சூர்யகுமார்
மும்பை: ''இந்திய அணிக்காக ஆசிய கோப்பை, 'டி-20' உலக கோப்பை வென்று கொடுத்தேன். எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த சமயத்தில், திடீரென என்னை நீக்கி அதிர்ச்சி அளித்தனர்,''என சூர்யகுமார் தெரிவித்தார்.
இந்திய அணியின் அதிரடி பேட்டர் சூர்யகுமார் யாதவ், 35. மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விளாசும் இவர், 'மிஸ்டர் 360 டிகிரி' என போற்றப்பட்டார். 2022ல் ஐ.சி.சி., 'டி-20' பேட்டர் ரேங்கிங்கில் முதலிடம் பிடித்தார். 2024ல் இந்திய அணியின் 'டி-20' கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இந்தியா, 50 போட்டியில் 42ல் வென்றது. 2025ல் ஆசிய கோப்பை (டி-20) கைப்பற்றியது. 2026ல் சொந்த மண்ணில் 'டி-20' உலக கோப்பை (எதிர், நியூசி., ஆமதாபாத்) வென்றது. இப்படி வெற்றிக் கேப்டனாக திகழ்ந்த இவரை, அணியில் இருந்தே தேர்வாளர்கள் நீக்கினர். சமீபத்திய அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடருக்கு புதிய கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயரை, 31, நியமித்தனர்.
இது பற்றி சூர்யகுமார் கூறுகையில்,''எனக்கு 2026ல் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நினைக்கவில்லை. அடுத்த இரு ஆண்டுகளுக்கு இந்திய அணியை முன்னோக்கி அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தேன். லாஸ் ஏஞ்சல்ஸ் (2028) ஒலிம்பிக்கில் பதக்கம், இன்னொரு 'டி-20' உலக கோப்பை வெல்லும் கனவில் இருந்தேன். இந்திய அணியின் நலனுக்காக தேர்வாளர்கள் சில முடிவு எடுத்திருக்கலாம். ஷ்ரேயஸ் ஐயர் சிறந்த வீரர், நல்ல கேப்டன். இதனால் தேர்வாளர்கள் மீது கோபம் இல்லை. ஆனால், இரு ஆண்டுகளாக எந்த 'டி-20' தொடரையும் இழக்கவில்லை, ஆசிய, 'டி-20' உலக கோப்பை வென்றிருக்கிறோம். இதே நிலை தொடரவே அனைவரும் விரும்புவர். எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த போது, ஏன் இந்த மாற்றம் என்று எண்ணி ஏமாற்றம் அடைந்தேன்.
மனைவி மந்திரம்: இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. இது எப்படி நடக்கலாம் என புலம்பினேன். 40-50 நாள் வீட்டில் சும்மா இருந்தேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டுமா...வேண்டாமா என ஒரே குழப்பம். அப்போது என் மனைவி தேவிஷா,'கிரிக்கெட் மீதான மோகத்தால், 13 அல்லது 15 வயதில் விளையாட துவங்கி இருப்பீர்கள். அதே ஆர்வத்துடன் மீண்டும் விளையாடுங்கள். உலக கோப்பை வென்றது, ரேங்கிங்கில் முதலிடம் பெற்றது, 2024 'டி-20' உலக கோப்பை பைனலில் பிடித்த அற்புத 'கேட்ச்' என நிறைய சாதித்துள்ளீர்கள்,' என ஊக்கம் அளித்தார்.
இதற்கு பின் மீண்டும் விளையாட துவங்கி உள்ளேன். எனக்கு 35 வயதாகிறது. இன்னும் 3 அல்லது நான்கு ஆண்டுகள் விளையாடலாம். நான் தயாராக இருக்கிறேன். சரியான நேரம் வரும் போது, தேர்வாளர்கள் எனக்கு அழைப்பு விடுக்கலாம்,''என்றார்.
அணியின் வெற்றி எப்படி போனால் என்ன நான் நூறு அடித்தால் போதும் என்று சச்சின் போல சூர்யா நினைக்காமல் இருந்ததால் வந்த வினை இதுமேலும்
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
-
கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்