பெடரருக்கு கவுரவம்: 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம்
நியூபோர்ட்: சுவிட்சர்லாந்தின் பெடரர், 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
முன்னாள் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் 45. கடந்த 1998ல் ஏ.டி.பி., டென்னிஸ் அரங்கில் காலடி வைத்த பெடரர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 20 பட்டம் வென்ற முதல் வீரரானார். ஆஸ்திரேலிய ஓபனில் 6, பிரெஞ்ச் ஓபனில் 1, விம்பிள்டனில் 8, யு.எஸ்., ஓபனில் 5 முறை கோப்பை வென்றுள்ளார்.
ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 310 வாரம் முதலிடத்தில் இருந்த பெடரர், தொடர்ச்சியாக 237 வாரம் 'நம்பர்-1' இடத்தில் இருந்து சாதனை படைத்துள்ளார். தவிர இவர், 5 முறை ஆண்டு இறுதியில் வெளியான தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்திருந்தார். ஒட்டுமொத்தமாக 103 ஏ.டி.பி., ஒற்றையர் பட்டம் கைப்பற்றிய இவர், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் (2008ல் தங்கம்-இரட்டையர், 2012ல் வெள்ளி-ஒற்றையர்) வென்றுள்ளார். மாஸ்டர்ஸ் தொடரில் 28 முறை சாம்பியன் பட்டம் வென்ற இவர், 6 முறை ஏ.டி.பி., 'வேர்ல்டு டூர் பைனல்ஸ்' தொடரில் கோப்பை வென்றிருந்தார்.
கடந்த 2022ல் ஓய்வு பெற்ற பெடரர், சர்வதேச டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதற்கான விழா, அமெரிக்காவின் நியூபோர்ட் நகரில் நடந்தது. இதற்கான விருதை, மனைவி மிர்காவிடம் இருந்து கண்ணீர்மல்க பெற்றுக்கொண்டார் பெடரர். இப்பட்டியலில் இணைந்த 272வது டென்னிஸ் நட்சத்திரமானார் பெடரர்.
இதுகுறித்து பெடரர் கூறுகையில், ''டென்னிஸ் 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் சேர்க்கப்பட்டது என் வாழ்நாளில் கிடைத்த மிகச்சிறந்த கவுரவங்களில் ஒன்றாகும். டென்னிஸ் மட்டுமே எனக்கு அனைத்தையும் வழங்கியது. இதை விட வேறு எதுவும் முக்கியம் கிடையாது. மனைவி மிர்காவிடம் இருந்து இவ்விருதை பெற்றது தனிச்சிறப்பு. போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், டென்னிஸ் மீதான அன்பு என்றும் நிலைத்திருக்கும்,'' என்றார்.
மேலும்
-
நீட் தேர்வு விவகாரம்; நாடு முழுவதும் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்
-
மம்தா பானர்ஜி உறவினர் வீட்டில் சடலமாக கண்டெடுப்பு; கொலையா, தற்கொலையா என விசாரணை
-
ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
நேபாளத்தில் இறந்த இந்தியர்களை அடையாளம் காணும் வழிமுறை: இந்தியத் தூதரகம் அறிவுரை
-
சீன அதிபருடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி
-
பட்டா பெயர் மாற்றம் செய்ய 30 ஆயிரம் லஞ்சம்; வி.ஏ.ஓ., கைது