'கவுன்டி' அணியில் அகிப் நபி: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக
லண்டன்: இந்தியாவின் அகிப் நபி, சர்ரே 'கவுன்டி' அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர் அகிப் நபி 29. சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடரில், காயத்தால் விலகிய பும்ராவுக்கு பதிலாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் விளையாடும் 'லெவன்' அணியில் இடம் கிடைக்கவில்லை.
நியூசிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (நவ. 19-23, நவ. 27 - டிச. 1) பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் விதமாக, இங்கிலாந்தில் நடக்கும் 'கவுன்டி' சாம்பியன்ஷிப் போட்டியில், அகிப் நபியை களமிறக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முடிவு செய்தது. இதனையடுத்து சர்ரே அணிக்காக 3 போட்டிகளில் விளையாட அகிப் நபி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அகிப் நபி, வரும் செப். 2ல் லண்டன், ஓவல் மைதானத்தில் துவங்கும் யார்க் ஷைர் அணிக்கு எதிரான 'கவுன்டி' சாம்பியன்ஷிப் போட்டியில் சர்ரே அணிக்காக முதல்முறையாக களமிறங்க உள்ளார். அதன்பின் சசக்ஸ் (செப். 8-11, இடம்: ஹோவ்), கிளாமார்கன் (செப். 15-18, லண்டன், ஓவல்) அணிகளுக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார்.
'கவுன்டி' போட்டிக்கு முன், புதுச்சேரியில் நடக்கவுள்ள ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான 2 போட்டிகள் (செப். 22-25, செப். 29 - அக். 2) கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா 'ஏ' அணிக்காக அகிப் நபி விளையாட உள்ளார்.
மேலும்
-
இருண்டு போயிருந்த...முதியோரின் வாழ்வில் ஒளி!
-
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வது நல்ல முயற்சியா? பெல்டக்ஸ், செயின் லிங்க் சரியான வழியா?
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?