தொடரை வென்றது இங்கிலாந்து: பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வி

லார்ட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்டில் அசத்திய இங்கிலாந்து அணி 194 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 290, பாகிஸ்தான் 110 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 177/7 ரன் எடுத்திருந்தது.


நான்காம் நாள் ஆட்டத்தில் டான் லாரன்ஸ் 54 ரன்னில் ஆட்டமிழந்தார். ராபின்சன் (8), ஜோஷ் டங் (12) நிலைக்கவில்லை. இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 208 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.

பின், 389 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணிக்கு ராபின்சன் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' அசான் அவைஸ் (6), அப்துல்லா ஷபிக் (0) வெளியேறினர். கேப்டன் பாபர் ஆசம் (6) ஏமாற்றினார். சவுத் ஷகீல் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய ராபின்சன் பந்தில் ஷான் மசோத் (26), ரிஸ்வான் (1) அவுட்டாகினர். அலி உஸ்மான் (16), குர்ரம் ஷாசாத் (9) நிலைக்கவில்லை. ஜோஷ் டங் பந்தில் ஷகீல் (97) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 194 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இங்கிலாந்து சார்பில் ராபின்சன் 4, ஜோஷ் டங் 3, ஆர்ச்சர் 2 விக்கெட் கைப்பற்றினர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை பெற்றது.

Advertisement