நெய்வேலி ஜெயப்பிரியா சினிமாஸ் திறப்பு விழா
படம் 4 காலம்
மந்தாரக்குப்பம், ஆக. 29–
நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜெயப்பிரியா சினிமாஸ் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு ஜெயப்பிரியா குழும நிர்வாக இயக்குநர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். குழும தலைவர் ராசகோபாலன் முன்னிலை வகித்தார். ஜெய் நிதிஷ், ஜெய் நிஷிதா வரவேற்றனர்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு புதுப்பிக்கப்பட்ட ஜெயப்பிரியா சினிமாஸ் அரங்கத்தை திறந்து வைத்தார். இயக்குநர்கள் அனிதா ஜெய்சங்கர், பத்மபிரியா வெங்கடேசன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இதுகுறித்து நிர்வாக இயக்குநர் ஜெய்சங்கர் கூறியதாவது : ஜெயப்பிரியா சினிமாஸ் புதிய பொலிவுடன் ‘அல்ட்ரா மாடர்ன்’ தொழில் நுட்ப வசதிகளுடன் நிதிஷ், நிஷிதா என்ற இரண்டு திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. புதிய உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் திரையரங்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
4 கே அல்ட்ரா எச்.டி லேசர் ப்ராஜெக்ஷனுடன் மிகத் தெளிவான, துல்லியமான காட்சி அனுபவத்துடன் டால்பி அட்மோஸ்டன் ஒலி அமைப்பு உள்ளது. தியேட்டரின் நாற்புறமும் சூழ்ந்து ஒலிக்கும் தத்ரூபமான சவுண்ட் சிஸ்டத்துடன், படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப அசையும் அதிநவீன இருக்கை வசதிகள் மற்றும் சொகுசான பிரீமியம் சீட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிநவீன 3 டி எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் பிரம்மாண்டமான இன்டீரியர் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவுகள் ‘புக் மை ேஷா’ என்ற இணைய தளத்தில் பதிவுகள் நடைபெற்று வருகின்றது என்றார்.
விழாவில் தொழிலதிபர்கள் நாகூர்கனி, ரமேஷ்குமார், வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் ராஜமாரியப்பன், வேலன் குரூப் ஆப் கம்பெனிஸ் சிவசங்கரன், செம்பபையனார் டிரேடர்ஸ் அன்டு டிரான்ஸ்போர்ட் ஆனந்த், ஈஸ்வர் அசோசியேட்ஸ் ரவிச்சந்திரன், வடலுார் நியூ கிருஷ்ணா பேக்கரி சேகர், நேஷனல் பிரிண்டர்ஸ் ரமேஷ், ஜெயராம் ஏஜென்சீஸ் ஏழுமலை, தே.மு.தி.க., போக்குவரத்து பிரிவு மாநில செயலாளர் தண்டபாணி, முன்னாள் கவுன்சிலர் ஸ்ரீராமுலு, ரவிராஜன் ஒட்டுநர் பயிற்சி பள்ளி துரைராஜ், சண்முகா ஆப்செட் பிரஸ் கார்த்திகேயன், அம்மன் எசன்ஸ் மார்ட் ரவீந்திரன், ஸ்ரீராம் பிரிண்டர்ஸ் ராஜாசிங், ஆச்சி மசாலா ஏஜென்சிஸ் பாபு, பெரியசாமி விலாஸ் பாத்திரக்கடை, ஆனந்தபவன் ஸ்வீட்ஸ் அன்டு பேக்கரி செல்லதுரை, காமாராஜ் வாடகை பாத்திர நிலையம் காமராஜ், அமர் கிளாஸ் அன்டு எலக்டரிக்கல், கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ், தனம் மெஸ் சீனிவாசன், எம்.சி.சி., காய்கனி முருகன், எஸ்.கே.எல்க்ட்ரானிக்ஸ் சந்தோஷ், குமரன் டிஜிட்டல் பிரண்டர்ஸ், வாசவி செராமிக் & டிரேடிங் சிவபாலகுரு, தேவி டிஜிட்டல் பிரண்டர்ஸ்,சி.கே.,கல்விகுழும தலைவர் குமாரராஜா, எஸ்.எம்.என்.,குழுமம் சக்திமுருகன், அரசியல் கட்சி பிரமுகர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், என்.எல்.சி., அதிகாரிகள், அரிமா, ரோட்டரி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
-
கராத்தே: 955 பேர் உற்சாகம்
-
எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
-
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்
-
மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
-
வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்