நேபாள வெள்ளத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 700ஐ கடந்தது; 2,498 பேர் மாயம்!
காத்மாண்டு: திடீர் வெள்ளத்தில் பலியானவர்களின் உடல்களை வைப்பதற்கு இடப்பற்றாக்குறையால் நேபாளம் தவித்துவரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான நேபாளம், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், அதிக உயரத்தில் உள்ள ஏரி உடைந்ததால் உருவான மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட நேபாள பகுதிகள் முழுவதும், வெள்ள நீரால் அடித்து வரப்பட்ட சகதியில் மூழ்கியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதுவரை வெள்ளத்தில் சிக்கி 734 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 2,498 பேர் காணாமல் போயுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. பலியானவர்களின் உடல்களை வைப்பதற்கு இடப்பற்றாக்குறையால் நேபாள அரசு தவித்து வருகிறது. அடையாளம் தெரியாத சடலங்கள் அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகப் பிரதமர் பாலேந்திர ஷா அறிவித்துள்ளார். நேபாள அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அங்கு நிலைமை தொடர்ந்து மோசமாகவே உள்ளது. மேலும், வெள்ள நீர் மட்டம் உயர்ந்து வருவதால், மீட்புக் குழுவினர் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக 5,000க்கும் மேற்பட்ட நேபாள ராணுவ வீரர்கள் உட்பட 11,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து (1)
குமார் - ,
30 ஆக்,2026 - 12:02 Report Abuse
உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 0
0
Reply
மேலும்
-
தொடரை வென்றது இங்கிலாந்து: பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வி
-
'கவுன்டி' அணியில் அகிப் நபி: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக
-
கிழக்கு மண்டல அணி அபாரம்: துலீப் டிராபி அரையிறுதியில்
-
இந்திய அணியில் இடம்: மனம் திறக்கிறார் சூர்யகுமார்
-
ஜெர்மனி மீண்டும் சாம்பியன்: உலக கோப்பை ஹாக்கியில் கலக்கல்
-
பெடரருக்கு கவுரவம்: 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம்
Advertisement
Advertisement