உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி!
தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு, பிரதமர் மோடி நான்கு நாள் அரசு முறைப்பயணம் பயணம் மேற்கொண்டுள்ளார். உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் விமான நிலையத்துக்கு நேற்று சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் நேரில் சென்று வரவேற்றார். இந்திய வம்சாவளியினர் கலைநிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.

பிரதமர் ரீல்ஸ் வீடியோ!
யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் பிரதமர் மோடி ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டா சமூகவலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். வீடியோவில் அவர் கூறியதாவது: நமஸ்தே, நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று சிறப்பாக யோகா செய்து காட்டி இருக்கிறீர்கள்.
அனைத்து வயதினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றீர்கள். உஸ்பெகிஸ்தானை யோகாவுடன் இணைத்ததற்காக என் நண்பரான ஜனாதிபதிக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (5)
Farmer - CA,இந்தியா
30 ஆக்,2026 - 20:47 Report Abuse
ஒரு பக்கம் வாழ்த்துக்கள் .....
ஆனால் இந்த யோகா பயிற்சியை செய்வது ஒரு பிரதமர் வேலையா?
எங்க ஊரு மாஸ்டர் செஞ்சிடுவார்.
இவரு வேலைய எப்போ செய்ய போறார் ? 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
30 ஆக்,2026 - 20:18 Report Abuse
யோகா பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு அவசியம் தேவை .என்னுடைய சொந்த அனுபவம் .அது இரத்தவோட்டத்தை சீராக வைத்து இரத்த அழுத்தம் Blood Pressure சீராக வைத்த்துக்கொள்ள உதவுகிறது .இரத்தஓட்டம் சீராக இருந்தால் ஆரோக்கியம் கிடைக்கும் .ஒரு ரகசியம் மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன் .எந்த வயதிலும் உங்கள் இரத்தஓட்டம் சீராக வைத்துக்கொள்ள யூடியூபில் ஜப்பானிய சீனியர் டாக்டர் ஒருவர் 4 வகையான உடற்பயிற்சி காட்சிப்படுத்தி இருக்கின்றார் .எந்த வயதினரும் செய்யலாம் .அதைப்பார்த்து கூடவே நமது வழக்கமான மூச்சு பயிற்சி பிளஸ் சில உடற்பயிச்சி செய்ததில் என்னுடைய இரத்தவோட்ட பதிவு கடந்த மே மாதத்தில் 112/76 ..நீங்களும் செய்து பயன்பெறுங்கள் .எனக்கு செலவு காலையில் 45 நிமிடங்கள் மட்டுமே .. 0
0
Reply
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
30 ஆக்,2026 - 19:50 Report Abuse
யோகா பயிற்சி பல முன்னேறிய நாடுகளில் சிறப்பாக கற்று தருகிறார்கள் .கற்று தருபவர்களுக்கு அதே நாட்டை சேர்ந்தவர்கள் . 0
0
Reply
Iyer - Karjat,இந்தியா
30 ஆக்,2026 - 15:55 Report Abuse
பாரதத்தில் - பள்ளி கல்லூரிகளில் யோகாவை பாடத்திட்டமாக்குங்கள் பிரதமரே.
ஒவ்வொரு மாணவ மாணவியும் - யோகா, சூரியநமஸ்காரம், பிராணாயாமம், த்யானம் போன்றவற்றை கற்க - நடைமுறையைல் தினமும் பின்பற்ற உதவி செய்யுங்கள் 0
0
Reply
rajkaran - ,
30 ஆக்,2026 - 12:04 Report Abuse
யோகா உடல் நலத்திற்கு ஆரோக்கியம் அதனை மேற்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 0
0
Reply
மேலும்
-
இருண்டு போயிருந்த...முதியோரின் வாழ்வில் ஒளி!
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
Advertisement
Advertisement