சிவகங்கை அருகே ஆரியபவன் நகரில் தார் ரோடு வசதியின்றி மக்கள் அவதி: கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
சிவகங்கை:சிவகங்கை அருகே ஆரியபவன் நகர் பகுதியில் தார் ரோடு வசதியின்றி பொதுமக்கள் குண்டும் குழியுமான மெட்டல் ரோட்டில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், வாணியங்குடி கிராம ஊராட்சியின் கீழ் ஆரியபவன் நகர், போக்குவரத்து நகர், திருப்பதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் வசிக்கின்றனர். அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிகளவில் இப்பகுதியில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
கடந்த உள்ளாட்சி நிர்வாகத்தின் போது வாணியங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பேவர் பிளாக் சாலை போட்டு கொடுத்துள்ளனர். ஆனால் ஆரியபவன் நகர், போக்குவரத்து நகர், திருப்பதி நகர் செல்லும் மக்கள் முக்கிய ரோடான ஆரியபவன் நகர் ரோடு பல ஆண்டாக போடப்படாமல் உள்ளது. கடந்த சில ஆண்டிற்கு முன் மெட்டல் ரோடு போட்டுள்ளனர்.
அதற்கு பின் அந்த ரோட்டை தார் ரோடாக மாற்றி தர வேண்டும் என ஆரியபவன் நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய மற்றும், வாணியங்குடி கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஆரியபவன் நகரில் தார் ரோடு வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்போர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
-
கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்