காங்., கூட்டத்தில் நாற்காலிகள் வீச்சு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், நாற்காலிகளை கட்சியினர் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக, மாவட்ட செயற்குழு மற்றும் ஆலோசனை கூட்டம், திருவண்ணா மலையில் நேற்று நடந்தது . அதில், கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கு அடுத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி மறு சீரமைப்பு நிர்வாகிகள் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். மேடையில் இருந்த கட்சி நிர்வாகிகளுக்கு, சால்வை போட, மாநில செயற்குழு உறுப் பினர் கோபாலகிருஷ்ணன் , மேடை மீது ஏறினார். அவரை, குணசேகரன் தடுத்து நிறுத்தினார்.
இதனால் கோபாலகிருஷ்ணன், குணசேகரன் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து, இருவரின் ஆதரவாளர்களுக்கு இடையே வாக்குவாதம் தொடங்கி, கைகலப்பாக மாறியது. அப்போது, அங்கிருந்த நாற்காலிகளை வீசி தாக்கிக் கொண்டனர்.
கூட்டம் நடந்த இடத்தில் பரபரப்பு அதிகரித்த நிலையில், கட்சியின் மேலிட பார்வையாளர் துரைவேலன், மண்டல பொறுப்பாளர் அருள் பெத்தய்யா உள்ளிட்டோர், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அதன்பிறகு, கூட்டம் நடந்தது.
இதெல்லாம் சகஜமப்பா எங்க கட்சியில
நாற்காலிகளே வீசியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் இது ஒரு வன்முறை இவர்களின் இந்த செயலால் உயிரிழப்பு ஏற்பட்டால் கொலைகாரனாக ஆகிவிட மாட்டார்களா. எனவே இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொண்டர் சட்டத்தில் உள்ள தள்ளுங்கள்.
இவர்களின் ஒத்துமை ஓங்குக.
வழக்கமாகன பொதுக்கூட்டம்தான் .இவளவு . பெரிய செய்தியாக வெளியியிட்டிருக்கவேண்டாம். நல்லவேளை 10, 15 பேர் கூடும் கூட்டமாக இருபதால் கட்டுக்குள்தான் இருந்திருக்கும். ..மேலும்
-
வழிப்பறி வழக்கு 6 பேர் மீது குண்டாஸ்
-
சிவகங்கை அருகே ஆரியபவன் நகரில் தார் ரோடு வசதியின்றி மக்கள் அவதி கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
-
போதைப்பொருள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் இலக்கு; மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு
-
சொல்கிறார்கள்
-
உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி!
-
நேபாள வெள்ளத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 700ஐ கடந்தது; 2,498 பேர் மாயம்!