மதத்தின் பெயரால் சலுகை அப்பட்டமான சந்தர்ப்பவாதம்

10

சட்டசபையில், சிறுபான்மை இனத்தவருக்கு சலுகைகளை அறிவித்த அமைச்சர் ஷாஜஹான், 'முஸ்லிம் மாணவியரின் கல்லுாரி கட்டணங்களை அரசே ஏற்கும்; இதற்காக, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார். இது, பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். வக்பு சொத்துக்கள், சர்ச் சொத்துக்களை பாதுகாக்க 100 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிற மத வழிபாட்டு தலங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து கோடிக் கணக்கில் நிதி வருகிறது. அவற்றின் வருவாயும் அவர்களிடமே உள்ளது; அரசு தலையிட முடியாது. வக்பு வாரியத்திடம் பல நுாறு கோடி ரூபாய் உள்ள நிலையில், புதிய கட்டடம் கட்ட, 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது, அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல். மதத்தின் பெயரால் சலு கை வழங்க, அரசியலமைப்பு சட்டம் தடை செய்கிறது. த.வெ.க., அரசின் செயல்பாடுகள், சிறுபான்மையினருக்கு சார்பான அரசு என்பது போ ல உள்ளது. இதை முதல்வர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- காடேஸ்வரா சுப்ரமணியம்,

மாநில தலைவர், ஹிந்து முன்னணி.

Advertisement