தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 2,234 பேர் பங்கேற்பு
கரூர்:கரூர்
மாவட்டம், பண்டுத காரன்புதுார் அரசு மகளிர் கலை கல்லுாரியில், மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நடந்தது. இதில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, கலெக்டர்
முத்துக்குமரன், பணி நியமன ஆணை வழங்கினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
ஒரு
நாட்டின் வளர்ச்சிக்கு வேலைவாய்ப்பு என்பது மிகவும் முக்கியமானது.
எனவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஒவ்வொரு
அரசின் முக்கிய கடமையாகும். அதன்படி, இந்த அரசும் இளைஞர்களுக்கு
வேலைவாய்ப்புகளை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகிறது.
இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் உங்களை போன்ற
இளைஞர்கள் சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்று, பணிகளில்
சேர்ந்து, நாட்டின் வளர்ச்சிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்க
வேண்டும். இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கும், வாழ்க்கையில் நல்ல
நிலையை அடைவதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம்
தொடர்ந்து வழங்கும். தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
ஏனென்றால், உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இன்று அனைத்து
துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின், 174க்கும்
மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 2,234 வேலைநாடுநர்கள் கலந்துகொண்ட
இம்முகாமில், 51 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். நிகழ்ச்சியில்,
திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் பொன்னம்பலம், மண்டல இணை
இயக்குனர்(வேலை வாய்ப்பு) ஜோதிமணி, கரூர் ஆர்.டி.ஓ.,
சத்தியபாலகங்காதரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி உள்பட
பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
-
கராத்தே: 955 பேர் உற்சாகம்
-
எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
-
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்
-
மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
-
வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்