ஒட்டம்பட்டு பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
செஞ்சி: விழுப்புரம் - செஞ்சி சாலையில் முக்கிய பஸ் நிறுத்தமாக உள்ள ஒட்டம்பட்டில், பயணியர் நிழற்குடை இன்றி பொதுமக்கள் வெயில், மழையில் அவதிப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் - செஞ்சி மெயின் ரோட்டில் உள்ள ஒட்டம்பட்டு பஸ் நிறுத்தத்தை ஒட்டம்பட்டு, காரை, வரிக்கல், திருவதிகுண்ணம், கொம்மேடு, அத்தியூர், அனையேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட பயணத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், விவசாயிகள், பெண்கள், முதியவர்கள் என தினமும் ஏராளமானோர் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், பயணிகள் காத்திருப்பதற்கு நிழற்குடை வசதி இல்லாததால், கடும் வெயிலிலும், மழைக்காலங்களில் மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் மழையில் நனையும் நிலை உள்ளது.
மேலும், விழுப்புரம் - செஞ்சி சாலை போக்குவரத்து அதிகம் உள்ள முக்கிய சாலையாக இருப்பதால், சாலையோரத்தில் பயணிகள் பாதுகாப்பற்ற நிலையில் சாலையை ஒட்டி நிற்கின்றனர்.
எனவே, ஒட்டம்பட்டு பஸ் நிறுத்தத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, பயணியர் நிழற்குடை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
வழிப்பறி வழக்கு 6 பேர் மீது குண்டாஸ்
-
சிவகங்கை அருகே ஆரியபவன் நகரில் தார் ரோடு வசதியின்றி மக்கள் அவதி கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
-
போதைப்பொருள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் இலக்கு; மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு
-
சொல்கிறார்கள்
-
உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி!
-
நேபாள வெள்ளத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 700ஐ கடந்தது; 2,498 பேர் மாயம்!