கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
கரூர்:கரூர் கலெக்டர் முத்துக்குமரன்
வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசு சார்பில் இதர
பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்,
சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம்
செயல் படுத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், தேசிய கல்வி
உதவித்தொகை இணையதளம் https://scholarships.gov.in விண்ணப்பிக்க
வேண்டும்.
இத்திட்டத்தில் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி
கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சம், 9--10ம் வகுப்பு, 75,000
ரூபாய், பிளஸ் 1, 2விற்கு, 1,25,000 ரூபாய் வழங்கப்படுகிறது.- குடும்ப
ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய் மிகாமல் இருக்க வேண்டும். 2025--26ம்
கல்வியாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, தேசிய கல்வி உதவித்தொகை
இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில்
இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும். கடந்த
நிதியாண்டில் கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவர்கள் நாளைக்குள்
புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதை, பள்ளி ஹெச்.எம்., செப்., 15க்குள்
சரிபார்க்க வேண்டும்.
மேலும்
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
-
கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்