வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: அமெரிக்கா வெனிசுலா நாட்டுடன் எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா இப்போது வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
எனது உத்தரவின் பேரில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர், வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் தனியார் வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டனர்.
இதன் மூலம், அமெரிக்க வரி செலுத்துவோருக்கு எந்தச் செலவும் இன்றி, வெனிசுலாவில் உள்ள 65 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான எண்ணெய்களை பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அமெரிக்காவின் எண்ணெய் இருப்பை இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்துகிறது; நமது எண்ணெய் விநியோகத்தை வெகுவாக அதிகரிக்கிறது.
எதிர்காலத்தில் அனைத்து அமெரிக்கர்களுக்கும் எரிபொருள் விலையைக் கணிசமாகக் குறைக்கிறது. அதே வேளையில், வெனிசுலாவை மிகப்பெரிய வெற்றி, செழிப்பை நோக்கிய பாதையில் தொடர்ந்து பயணிக்கவும் இது உதவுகிறது. இந்த ஒப்பந்தம் வெனிசுலா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்கனவே வளர்ந்து வரும் உறவை மேலும் வலுப்படுத்தும்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியவர்களுக்கு நன்றி; அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவோம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (13)
Murthy - Bangalore,இந்தியா
30 ஆக்,2026 - 11:32 Report Abuse
மிகப்பெரிய கொள்ளை 0
0
Reply
Prathap - ,
30 ஆக்,2026 - 05:59 Report Abuse
இவன் ஒரு நவீன கால ஹிட்லர். கருட புராணம் தனது பங்கிற்கு வேலை செய்யும். 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
29 ஆக்,2026 - 18:26 Report Abuse
மிகப் பெரிய திட்டமிட்ட மகா திருட்டுத்தனம்? 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
29 ஆக்,2026 - 17:57 Report Abuse
முதலில் நாட்டை கைப்பற்றி பின்பு எண்ணெய்க்கு மிரட்டி ஒப்பந்தம். திருடனின் அநியாயம்? 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
29 ஆக்,2026 - 14:34 Report Abuse
இவர் - சிலநேரம் அலுவினி - சிலநேரம் புழுவினி 0
0
Reply
ராஜா - Chennai,இந்தியா
29 ஆக்,2026 - 12:04 Report Abuse
ஐரோப்பா இன்று அமெரிக்காவை நம்பியதன் பலனை அறுவடை செய்கிறது. அமெரிக்காவிடம் மட்டும் தான் அவர்கள் எண்ணை வாங்க முடியும். அதுவும் ஆறு மடங்கு விலை கொடுத்து. 0
0
Reply
Narasimhan - Manama,இந்தியா
29 ஆக்,2026 - 11:37 Report Abuse
உலக மகா திருடன். இதையே இராக் குவைத் மீது ஆக்ரமித்தபோது லட்சக்கணக்கானோரை கொலை செய்து அந்நாட்டின் பொருளாதாரத்தை அகல பாதாளத்தில் தள்ளிய நயவஞ்சக நாடு. 0
0
Reply
Arul Siva Murugan Velayutham - Bangalore,இந்தியா
29 ஆக்,2026 - 11:18 Report Abuse
திருட்டு தனத்தை இப்படி டீசெண்டா சொல்லக்கூடாது .. திருடணனை திருடன் தான் என சொல்லவேண்டும் 0
0
Reply
Anand - chennai,இந்தியா
29 ஆக்,2026 - 10:23 Report Abuse
திருடுவதற்கு எதற்குடா ஒப்பந்தம்? உலகத்திலேயே மிகப்பெரிய திருடன் இவன் தான். 0
0
Reply
Dv Nanru - mumbai,இந்தியா
29 ஆக்,2026 - 08:37 Report Abuse
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா இப்போது வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இதற்குப் பெயர் ஒப்பந்தம் அல்ல. இதற்குப் பெயர் உப்புக்கண்டம். உப்புக்கண்டம் எப்படி தயாரிப்பது என்பது ட்ரம்புக்குத் தெரியுமா தெரியாதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்படி உப்புக்கண்டம் செய்வது என்பதை நான் சொல்கிறேன்.
நல்லா இருக்கின்ற ஆட்டை அதை வெட்டி தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் உப்பு, மஞ்சள், மிளகாய்த்தூள் போட்டு நன்றாக கலந்து அதன் பிறகு வெயிலில் காய வைத்து நன்றாக காய்ந்த பிறகு அதை எடுத்து குழம்பு வைத்து சாப்பிடுவது இதற்குப் பெயர்தான் உப்புக்கண்டம்.
அதே போலத்தான் இந்த ட்ரம்பின் நடவடிக்கை இருக்கின்றது. நல்லா இருக்கின்ற பக்கத்து நாட்டு வெனிசுலா அதிபரைக் கைது செய்து மனைவியையும் அதிபரையும் அமெரிக்காவில் ஒளித்து வைத்து இப்பொழுது நாடகம் ஆடுகின்றார் ட்ரம்ப்.
இதற்குப் பெயர் ஒப்பந்தம் அல்ல. இதற்குப் பெயர்தான் உப்புக்கண்டம்.
ஒரு நல்ல நிலையில் உள்ள பக்கத்து நாட்டின் வெனிசுலா ஆட்சியைக் குலைத்து, அந்நாட்டின் வளங்களை அமெரிக்கா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதைச்சுட்டிக்காட்டுள் உள்ளேன்இதை விடக் கேவலமாக வேறு யாரும் உதாரணத்தை சுட்டிக்காட்ட முடியாது,
அமெரிக்கா இதை ஒரு "வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணெய் ஒப்பந்தம்" என்று பெருமையாகக் கூறிக்கொண்டாலும், இது உண்மையில் நியாயமான ஒப்பந்தம் அல்ல 0
0
Santhakumar Srinivasalu - ,
29 ஆக்,2026 - 18:28Report Abuse
மிக நல்ல பதிவு! 0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement