திருச்செங்கோட்டில் தம்பதி தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு
திருச்செங்கோடு:திருச்செங்கோட்டில் குடும்பத் தகராறில், கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டது, சோகத்தை ஏற்படுத்தியது.
நாமக்கல்
மாவட்டம் திருச்செங்கோடு ஆறுமுகத்தான் குட்டை பகுதியை சேர்ந்தவர்
நித்தியானந்தம், 41; டிரைவிங் ஸ்கூல் நடத்தி வந்தார். இவரது மனைவி
தேன்தமிழ் செல்வி, 39; தனியார் பள்ளி ஆசிரியை. தம்பதி இடையே நேற்று
முன்தினம் மாலை முதல் அடிக்கடி சிறு தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை படுக்கையறை மின் விசிறியில்,
நித்தியானந்தம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த
தேன் தமிழ்செல்வியும், ஹாலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த திருச்செங்கோடு போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி,
திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்கொலை
செய்து கொண்ட தம்பதிக்கு, 17 வயதில் மகள், கோவை தனியார் கல்லுாரியில்
பிசியோ
தெரப்பி படித்து வருகிறார். 14 வயதிலான மகன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
மேலும்
-
வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
-
கராத்தே: 955 பேர் உற்சாகம்
-
எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
-
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்
-
மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
-
வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்