அமெரிக்க பள்ளியில் கத்திக்குத்து சம்பவத்தால் பரபரப்பு; 14 வயது மாணவர்கள் 3 பேர் காயம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 3 மாணவர்கள் காயம் அடைந்தனர்; 14 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் டெக்சாஸில் எல் பாசோவில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கத்தியுடன் நின்றுக் கொண்டிருந்த ஒரு நபர், அங்கு இருந்த மாணவரை கத்தியால் குத்தி வன்முறையில் ஈடுபட்டார்.
சக மாணவர் காப்பாற்ற முயன்றபோது, மற்ற இரண்டு மாணவர்கள் மீதும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. பிறகு, 14 வயதுடைய இரு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி கத்திக் குத்து காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்தனர். அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தாக்குதலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து பிற மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வன்முறைச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்
-
தொடரை வென்றது இங்கிலாந்து: பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வி
-
'கவுன்டி' அணியில் அகிப் நபி: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக
-
கிழக்கு மண்டல அணி அபாரம்: துலீப் டிராபி அரையிறுதியில்
-
இந்திய அணியில் இடம்: மனம் திறக்கிறார் சூர்யகுமார்
-
ஜெர்மனி மீண்டும் சாம்பியன்: உலக கோப்பை ஹாக்கியில் கலக்கல்
-
பெடரருக்கு கவுரவம்: 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம்