சவக்கிடங்குகளில் குவிந்த உறவினர்கள்; சடலங்களை அடையாள காண உதவும் நேபாள போலீசாரின் கியூஆர் குறியீடு!
-நமது நிருபர்-
நேபாள போலீசார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், மீட்கப்பட்ட உடல்களின் புகைப்படங்கள் மற்றும் அடையாள விவரங்களைப் பார்க்க வகையில் ஏற்பாடு செய்துள்ளது.
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்குகளால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும் , 1,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயும் உள்ள நிலையில் தற்போது போதேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட சடலங்களைப் பாதுகாத்து அடையாளம் காணும் சவாலை எதிர்கொண்டுள்ளது. மேலும், சடலங்கள் தொடர்ந்து வெகு தொலைவில் உள்ள ஆற்றுப் பகுதிகளுக்கு அடித்து வரப்படுவதால், நேபாளத்தின் பல மாவட்டங்களில் உள்ள சவக்கிடங்குகள் நிரம்பி உள்ளன.
மாயமானவர்களின் குடும்பத்தினருடன் குவிந்துள்ளனர். தங்களது உறவினர்களை அழுதப்படியே அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே வேளையில், சடலங்களைப் பாதுகாக்கவும், அடையாளம் காணவும், சேமித்து வைக்கவும் அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
பல மாவட்டங்களில் உள்ள உள்ளூர் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், அதிகாரிகள் சடலங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் சடலங்கள் மீட்கப்படுவதைச் சமாளிப்பதற்காக தற்காலிக மருத்துவ வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. திரிசூலி மற்றும் நாராயணி ஆறுகள் சங்கமிக்கும் சித்வான் பகுதியில் 137 உடல்கள் மீட்கப்பட்டன.
மருத்துவமனை சவக்கிடங்குகளில் ஒரே நேரத்தில் 30 முதல் 50 உடல்களை மட்டுமே வைக்க முடியும் என்பதால், அதிகாரிகள் பரத்பூரில் உள்ள பயன்படுத்தப்படாத அரசு கட்டடம் ஒன்றை தற்காலிக சேமிப்பு மையமாக மாற்றி வருகின்றனர். 250 உடல்களை வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடல் சிதைவடைவதை தடுக்க, குளிரூட்டிகள், உலர் பனிக்கட்டியைப் பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். காத்மாண்டு போதனா மருத்துவமனையின் சவக்கிடங்கில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த நிலையில், அதன் வெளியே உறவினர்கள் குவிந்தனர்.
நேபாள போலீசார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், மீட்கப்பட்ட உடல்களின் புகைப்படங்கள் மற்றும் அடையாள விவரங்களைப் பார்க்க வகையில் ஏற்பாடு செய்துள்ளது.
அவர்களில் யாரேனும் காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கக்கூடுமா என்பதையும் மக்கள் சரிபார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேபாள போலீசாரின் கியூஆர் குறியீடு வசதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் அடையாளம் காண உதவுகிறது.
வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் பட்டியலை நேபாள போலீசார் தயாரித்து உள்ளனர். இதில், மீட்கப்பட்ட ஆனால் இன்னும் அடையாளம் காணப்படாத உடல்களும் அடங்கும். அதிகாரிகள் மற்றொரு தற்காலிக சவக்கிடங்காக ஒரு சமூக மண்டபத்தையும் தயார் செய்து வருகின்றனர்.
மேலும்
-
ராயல் ஓக் பர்னிச்சர் நிறுவன திறப்பு விழா
-
வெள்ள மீட்புப் பணிகளுக்கு வெளிநாட்டு உதவி; ஓகே சொன்னது நேபாள அரசு
-
பெருவெள்ளத்தை எதிர்த்து நின்ற மாடி வீடு; நேபாள இன்ஜினியருக்கு சபாஷ் போடும் நெட்டிசன்கள்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ‘அம்மா, அப்பா என்ற இரட்டை பொறுப்பு எனக்கு பிடிக்கும்!’ ––––––––––––––
-
சொல்கிறார்கள் ––––––––––––– ‘வட்டார மொழியால் தொழில் முனைவோர் ஆனேன்!’ –––––––––––––
-
பாக்., ட்ரோன்கள் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்