போடி சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

போடி:தென்காசியம்பதி என அழைக்கப்படும் போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.

போடியில் மிகவும் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் காமராஜ் பஜாரில் அமைந்து உள்ளது. 51 அடி ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கியும், அம்மனுக்கும், சிவனுக்கும் இடையில் மூலஸ்தானமாக வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி அமைந்து உள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. மீண்டும் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கும்பாபிஷேக யாக பூஜை நடந்தது.

போடி சுப்பிரமணிய சுவாமி கோயில் பரம்பரை அரங்காவலர் முத்துராஜன் தலைமை வகித்தார். ஹிந்து அற நிலையத்துறை உதவி கமிஷனர் ஜெயதேவி, செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தனர். நேற்று காலை கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், சிவன், தட்சணாமூர்த்தி, ஆஞ்ச நேயருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள், திருக் கல்யாணம் நடந்தது.



விழாவில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கம்பம் எம்.எல்.ஏ., ஜெகநாத் மிஸ்ரா, பெரியகுளம் கைலாசநாதர் கோயில் ஆலோசகர் ஜெயப்பிரதீப், போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, தொழிலதிபர் பரமசிவம், தேனி பிளைவுட்ஸ் உரிமையாளர் ராஜசேகரன், த.வெ.க. வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், போடி நகர செயலாளர் ஆண்டிச்சாமி, தி.மு.க. நகர செயலாளர் புருஷோத்தமன், கோயில் முன்னாள் அர்ச்சகர் சோமாஸ் கந்த குருக்கள், தேவாரம் ஜமீன்தார் தங்கபாண்டியன், கர்ணா ஓட்டல் உரிமையாளர் கயிலை பொன் கலைச்செல்வன், சந்தியாஸ் மஹால் உரிமையாளர் சம்பத், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சங்கர், பொம்மி மெடிக்கல் உரிமையாளர் பச்சையப்பன், ஜெ.வி., டிரேடர்ஸ் உரிமையாளர் ஜீவானந்தம், ஐயப்ப பக்த சபை நிர்வாகிகள், ஜனனி நகை அடகு கடை உரிமையாளர் சந்தோஷ் குமார், வைரம் கன்ஸ்ட்ரக்சன் உரிமை யாளர் சந்திரசேகர், தாஸ் பாரடைஸ் உரிமையாளர் முருகதாஸ், எஸ்.ஆர். கடலை கடை, ஸ்வீட்ஸ் அண்டு பேக்கரி உரிமையாளர் வாசு, அம்மு பர்னிச்சர் ஹோம் அப்ளையண்ஸ் உரிமையாளர் செல்வன், ஆலய ஸ்தபதி ஐயப்பன், ஆலய பஞ்சவர்ணம் ஓவியர் ராசிமணி, ஆர்.ஏ. ஆயில் ஸ்டோர் உரிமையாளர் ஆறுமுகம், முனீஸ் பிராய்லர்ஸ் உரிமையாளர் செல்வ கணபதி உள்ளிட்டோர், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement