குற்றச் சம்பவங்களை தடுக்க காவலாளிகளுக்கு விழிப்புணர்வு  

மயிலம்: குற்ற சம்பவங்களை தடுக்க தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் காவலாளிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

 மயிலம்  பகுதியில், கடந்த சில தினங்களாக பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மயிலம்,  கூட்டேரிப்பட்டு, கேணிப்பட்டு, தழுதாளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் காவலாளிகளுக்கான, விழிப்புணர்வு நிகழ்ச்சி மயிலம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமை தாங்கினார்.

காவலாளிகள், இரவு மற்றும் பகல் நேரங்களில் பணி செய்யும் பகுதிகளில் நடக்கும் குற்ற சம்பவங்களை எவ்வாறு தடுப்பது; மேலும் குற்ற சம்பவங்கள் நடக்கும் போது அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை, எவ்வாறு தொடர்பு கொள்வது என்பன உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும், 30க்கும்  மேற்பட்ட காவலாளிகள் கலந்து கொண்டனர்.

தனிப்பிரிவு ஏட்டு முருகன் நன்றி கூறினார்.

Advertisement