வடகிழக்கு பருவமழை:கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கடலுார்:வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு நடந்து வரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு கடலுார் மாநகராட்சிக்குட்பட்ட செல்லங்குப்பம், சிதம்பரம் தாலுகா அனுவம்பட்டு, பாசிமுத்தான் ஓடை, கடவாச்சேரி ஆகிய இடங்களில் நடந்து வரும் பணிகளை நேற்று ஆய்வு செய்தனர்.
செல்லங்குப்பம் பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறிய அளவிலான வாய்கால் மற்றும் பெரிய அளவிலான வாய்கால்கள் துார்வாரும் பணிகள், சிதம்பரம் தாலுகா, அனுவம்பட்டு பள்ள வாய்க்கால் மற்றும் பிரிவு வாய்க்கால் தில்லைநாயகபுரம் மற்றும் கீழ்அனுவம்பட்டு கிராமம் வரை 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரி கரையினை பலப்படுத்தும் பணி நடந்து வருவதை பார்வையிட்டனர்.
மேலும், பாசிமுத்தான் ஓடையில் ஒவ்வொரு ஆண்டும், பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, நீர்வளத்துறையின் மூலம் கடலுார் மாவட்டத்தின் முக்கிய பாசனக் கால்வாய்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகாயத்தாமரைகள் மற்றும் செடிகொடிகள் அகற்றும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்.
தொடர்ந்து கடவாச்சேரி, கவரப்பட்டு வாய்கால் மற்றும் பிரிவு வாய்கால்களை துார்வாரி கரைகளை பலப்படுத்தும் பணியினை பார்வையிட்டு ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன், பருவமழைக்கு முந்தைய ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, கடலுார் மாவட்டத்திற்கு 33 பணிகளுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கப்பட உள்ளது.
மேலும், மழைக்காலங்களில் நீர்தேக்கம் ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் தெரிவித்தார்.ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் கிஷன்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
இருண்டு போயிருந்த...முதியோரின் வாழ்வில் ஒளி!
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்