பாரதி ஆங்கில பள்ளியில் விளையாட்டு போட்டிகள்
புதுச்சேரி: சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 38வது விளையாட்டு போட்டிகள் தின விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் 2 நாட்கள் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் சுசீலா சம்பத் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் சம்பத் வரவேற்றார்.
விழாவில், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஷண்முகநாதன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி, போட்டியினை துவக்கி வைத்தார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் ஹரிஷ் குமார் முன்னிலை வகித்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.
தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மாணவர்களை வண்ணங்களின் பெயர்களில் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடந்தன.
எல்.கே.ஜி. முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இசை நாற்காலி, ஓட்டப் பந்தயம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் உள்ளிட்ட நடத்தப்பட்டன. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கபடி, கோ– கோ மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டது.
பள்ளியின் நிர்வாக இயக்குனர் மோகன் குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விஷ்வா, ஜெயஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும்
-
வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
-
கராத்தே: 955 பேர் உற்சாகம்
-
எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
-
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்
-
மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
-
வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்