ரூ. 19.5 கோடியில் ஏலக்கூடம் கட்டும் பணி: ராமு எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆய்வு
அரியாங்குப்பம்: நல்லவாடு பகுதியில் 19.5 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த ஏலக்கூடம் கட்டுமான பணியை, ராமு எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
மணவெளி தொகுதி, தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு மீனவ கிராமத்தில், 19.5 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த மீன் ஏலக்கூடம், இறங்கு தளம், மீன் பதப்படுத்தும் கூடம், படகுகளுக்கு டீசல் வழங்கும் பங்கு கட்டுவதற்கு புதுச்சேரி மீன்வளத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், இதற்கான பணி துவக்கப்பட்டது. இப்பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், ராமு எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்று கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
இதுவரை முடிக்கப்பட்ட பணிகளை, தரமாக உள்ளதா என அதிகாரிகளை கேட்டறிந்தார். வெகு விரைவில் ஏலக்கூடத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் அன்சாரி, இளநிலை பொறியாளர் கார்த்திக் உட்பட பலர் உடனிருந்தனர்.
மேலும்
-
வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
-
கராத்தே: 955 பேர் உற்சாகம்
-
எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
-
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்
-
மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
-
வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்