மூப்பனார் நினைவு தினம்

 புதுச்சேரி: மூப்பனார் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக முன்னாள் காங்., தலைவர் மூப்பனார் நினைவு தினத்தையொட்டி, மரப்பாலத்தில் உள்ள மூப்பனார் சிலைக்கு, புதுச்சேரி அரசு சார்பில், எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், அய்யப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி காங்., சார்பில், வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement