தண்டபாணி சுவாமி கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
சவுரிபாளையம்: தண்டபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் தவத்திரு ராமலிங்கசுவாமிகள் சமாதி திருக்கோயிலில் திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா, காலை 4:30 மணிக்கு துவங்கியது.
4:45 மூலமூர்த்திகளுக்கு எண் வகை மருந்து சாத்தப்பட்டது. காலை 5 மணிக்கு நான்காம் கால வேள்வியும், 108 வகையான காய், கனி, கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்களோடு பேரொளி வழிபாடும் நடந்தது.
6:45 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு திருக்குடநன்னீராட்டு பெருவிழா நடந்தது. பஞ்சமுக விநாயகர், வேலாயுதசாமி, பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்கள் மற்றும் குரு லிங்கத்துக்கு நன்னீராட்டு பெருவிழா நடந்தது.
மாலை 6 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு திருத்தேர் உலா நடந்தது.
பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், பழனியாதினம் சாதுசாமிகள் மடம் குருமகா சந்நிதானம் சாதுசண்முக அடிகளார், தென்சேரி ஆதினம் திருநாவுக்கரசர் நந்தவனம் திருமடம் ஐந்தாவது குருமகாசந்நிதானம் முத்துசிவராமசாமி அடிகளார் உள்ளிட்ட பலர் ஆசியுரை வழங்கினர்.
மேலும்
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
-
கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்