உலக நன்மையை நாடி மஹா நவசண்டி யாகம்
சேவூர்:சேவூர் அடுத்த போத்தம்பாளையம் பக்கிரிக்காட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் மஹா நவசண்டி யாகம் நடைபெற்றது.
தாராபுரம் வரன்பாளையம் திருநாவுக்கரசர் மடாதிபதி மவுனகுரு சிவாச்சலம் தலைமையில் யாகம் தொடங்கியது. பொள்ளாச்சி சிருங்கேரி மடம் ஆனந்த பாலாஜி சர்மா குழுவினர் வேள்வியை நடத்தினர். கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் தொடர்ந்து மஹா நவசண்டி யாகம் நடைபெற்றது.
மஹா பூர்ணாஹுதியுடன் யாகம் நிறைவடைந்தது. சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து பத்ரகாளியம்மன், சாமுண்டீஸ்வரி, பராசக்தி சுவாமிகளுக்கு கலச அபிஷேகம், திரவிய அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு ஹோமரட்சை, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
-
கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்
Advertisement
Advertisement