வியாபாரி காயம்
தேனி: அல்லிநகரம் முருகன் 50, பால் வியாபாரி. இவர் குமுளி-திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் டூவீலரில் சென்றார். ரோட்டை கடக்க நின்றார். கோவையை சேர்ந்த விஷ்னு 29, ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் முருகன் காயமடைந்து தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி ஈஸ்வரி புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் மாயம்
தேனி: ஓடைப்பட்டி புவனேஷ்வரன் 22. தாராபுரத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த புவனேஷ்வரன், நண்பர்களை காண வெளியே சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது தாயார் ரேகா புகாரில் ஓடைப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
டிரைவர் காயம்
தேனி: பெரியகுளம் சக்திவேல் 38, லாரி டிரைவர். இவர் தேனி-குமுளி ரோட்டில் உள்ள தனியார் மில் அருகே லாரியை நிறுத்தி டயரை பரிசோதித்து கொண்டிருந்தார். அப்போது திருப்பூர் மாவட்டம் குன்னுத்துாரை சேர்ந்த நவீன்கிருஷ்ணன் 34, ஓட்டி சென்ற கார் சக்திவேல் மீது மோதியது. விபத்தில் காயமடைந்த சக்திவேல் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
-
கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்