புதிய டிரான்ஸ்பார்மர் எம்.எல்.ஏ.,  இயக்கி வைப்பு

புதுச்சேரி: முருங்கப்பாக்கம் அன்னை தெரசா நகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரை, ஐயப்பன் எம்.எல்.ஏ.,  இயக்கி வைத்தார்.

அரியாங்குப்பம் தொகுதி முருங்கப்பாக்கம் அன்னை தெரசா நகர் பகுதியில், அடிக்கடி மின் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் அதனை சரி செய்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, ஐயப்பன் எம்.எல்.ஏ., முயற்சியால், 20 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில், புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதனை, ஐயப்பன் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். 

நிகழ்ச்சியில், மின்துறை தலைமை பொறியாளர் திலகராஜ், செயற்பொறியாளர் அருணகிரிநாதன், உதவி பொறியாளர்  குமரவேல், என்.ஆர்.காங்., மற்றும், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement