துளுவ வேளாளர் நல சங்கம் ஊக்கப்பரிசு வழங்கும் விழா
புதுச்சேரி: புதுச்சேரி துளுவ வேளாளர் நல சங்கம் சார்பில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க காசு ஊக்கப்பரிசு வழங்கும் விழா நடைபெறுவதையொட்டி, முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சங்க தலைவர் மோகன்ராஜ் அறிக்கை:
புதுச்சேரி துளுவ வேளாளர் எஜூகேஷனல் மற்றும் சாரிட்டபுள் டிரஸ்ட் மற்றும் காரைக்கால் துளுவ வேளாளர் நல சங்கம், துளுவ வேளாளர் திருமண தகவல் மையம் சார்பில், 18ம் ஆண்டு தங்க காசு ஊக்கப்பரிசு, இலவச மங்கள சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் சான்றிதழ், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அக்டோபர் 2ம் தேதி நடக்கிறது.
அதையொட்டி, துளுவ வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த 10வது மற்றும் பிளஸ் 2 மற்றும் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தங்க காசு ஊக்கப்பரிசு வழங்க உள்ளது. முன்பதிவு செய்யும் அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை வரும் 20ம் தேதிக்குள், எண் 45, ராஜலட்சுமி இல்லம் புதுசாரம் முதல் தெரு, மற்றும் எண், 433, காமராஜ் சாலை, பழைய சாரம், சிக்னல் அருகில் ஆகிய இடங்களில் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளவும்.
ஏற்பாடுகளை துளுவ வேளாளர் நல சங்க பொதுச்செயலாளர் ரவி, பொருளாளர் அருள்செல்வம் செய்து வருகின்றனர். மேலும், விபரங்களுக்கு, 9500701487,9843134024 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
-
கராத்தே: 955 பேர் உற்சாகம்
-
எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
-
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்
-
மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
-
வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்