மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் தொடர் விபத்துக்கள்

மூங்கில்துறைப்பட்டு: நான்கு முனை சந்திப்பில் தினமும் விபத்துகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டில் உள்ள மாநில நெடுஞ்சாலை நான்கு வழி சாலையில், நான்கு முனை சந்திப்பு உள்ளது.

இங்கு கள்ளக்குறிச்சி செல்லும் சாலையிலும், பொரசப்பட்டு செல்லும் சாலையிலும், ஒரு பகுதி முழுக்க இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி உள்ளதால் மற்ற வாகனங்கள் செல்லும் போது விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

இப்பகுதியில் கடைகள் முன்பு இருசக்கர வாகனங்களை சாலையிலே நிறுத்தி விட்டு செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன.

சாலையில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தினால் விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம் என்றுபொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் நலன் கருதி மாநில நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement