மம்தா பானர்ஜி உறவினர் வீட்டில் சடலமாக கண்டெடுப்பு; கொலையா, தற்கொலையா என விசாரணை

பிர்பும்: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர், அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது பற்றிய விவரம் வருமாறு;

ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள குசம்பா கிராமத்தில் மம்தா பானர்ஜியின் ஒன்றுவிட்ட சகோதரரின் மகள் பிரிஷ்டி முகர்ஜி (28) என்பவர் வசித்து வந்தார். அண்மையில் ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலியாக, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதன் எதிரொலியாக, பிரிஷ்டி முகர்ஜி வேலையிழந்தார்.

இந் நிலையில், சம்பவத்தன்று அவரது வீட்டில் உள்ள அறையில் பிரிஷ்டி முகர்ஜி, சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது சடலத்தை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே மரணத்துக்கான விவரம் தெரிய வரும் என்று போலீசார் கூறி உள்ளனர்.

இது குறித்து பேசிய அவரது குடும்பத்தினர், வேலையிழந்ததால் அண்மைக்காலமாக அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொண்டு இருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement