ஏ.எஸ்.பி., பொறுப்பேற்பு

ராசிபுரம்:ராசிபுரம் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விஜயகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, அவருக்கு பதிலாக புதிய அதிகாரியை நியமிக்க உத்தரவிடப்பட்டது.

ராசிபுரத்தில் முதல் முறையாக ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற மன்னம் சுஜித் சம்பத் ஏ.எஸ்.பி., ரேங்கில் பொறுப்பேற்றுள்ளார். இவர், 2022ம் ஆண்டு நடந்த அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வில், அகில இந்திய அளவில், 805வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றவர். ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்.
தேர்ச்சிபெற்ற இளம் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் களப்பயிற்சிக்காக, ஏ.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ராசி
புரத்தில், நேற்று பொறுப்பை முறைப்படி ஏற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Advertisement