உலக கடித தினம் கொண்டாட்டம்

குமாரபாளையம்:குமாரபாளையம் அரசு நடுநிலை பள்ளியில், சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் மற்றும் உலக கடித தினம் கொண்டாடப்பட்டது. அதில், பூலித்தேவன் உருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, மாவீரர் பூலித்தேவனின் வீர வரலாறு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக அவர் துணிச்சலுடன் மேற்கொண்ட விடுதலை போராட்டம் மற்றும் அவரது தியாக உணர்வு குறித்து ஜாய்ஸ் அருள்செல்வி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, உலக கடித தினத்தையொட்டி, மாணவ, மாணவிகளுக்கு தபால் அட்டைகள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர், பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு தங்களது அன்பையும் உணர்வு
களையும் வெளிப்படுத்தும் வகையில் கடிதம் எழுதும் பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்
பட்டது.

Advertisement