3 மடங்காகும் எனக்கூறி ரூ.25 லட்சம் மோசடி; 3 பேர் மீது போலீஸ் வழக்கு
தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை காளியம்மன் கோயிலில் பூஜை செய்தால் பணம் 3 மடங்காகும் எனக்கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே பெரியகிளுவச்சி கண்ணப்பன் 49. இவருக்கு அறிமுகமான ஒரு நபர் மூலம் நம்புதாளை குருஜி, திலகா, அசோக் ஆகியோரின் பழக்கம் கிடைத்தது. அவர்கள்,''எங்களிடம் சக்தி வாய்ந்த சாமியார்கள் உள்ளனர். நீங்கள் கொடுக்கும் பணம் 3 மடங்காக பெருகும் என கண்ணப்பனிடம் ஆசை வார்த்தை கூறினர். அதனை நம்பி கண்ணப்பன் ரூ.25 லட்சம் மூவரிடம் கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்ற மூவரும் இதற்காக செய்த பூஜை முடிந்து விட்டது எனக்கூறி ஒரு சூட்கேைஸ கொடுத்தனர். அதில் வைத்துள்ள ரூ.25 லட்சம் 3 மடங்காக உயர்ந்து ரூ.75 லட்சமாக மாறும். 21 நாட்கள் கழித்து தான் சூட்கேைஸ திறக்க வேண்டும். அதற்குள் திறந்தால் பூஜை பலிக்காது என்றனர்.
அவர்கள் கூறியபடி 21 நாட்கள் கழித்து கண்ணப்பன் சூட்கேைஸ திறந்த போது அதில் வெள்ளை காகிதங்கள் இருந்தன. ஏமாற்றபட்டதை அறிந்த கண்ணப்பன் பணத்தை திருப்பி கேட்ட போது 3 பேரும் கொலை மிரட்டல் விடுத்தனர். கண்ணப்பன் புகாரில் குருஜி, திலகா, அசோக் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். அவர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் ஏற்கனவே பல மோசடி வழக்குகள் உள்ளன.
மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை