இரும்பு கேட்டில் சிக்கிய மான்

கூடலுார்: கேரளா வண்டிப்பெரியாறு வள்ளக்கடவு அருகே தங்கச்சன் என்பவரது வீட்டின் கேட்டில் மான் சிக்கியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பீர்மேடு வனத்துறை விரைவு மீட்பு குழுவினர் ஒன்றரை மணி நேரத்திற்கு பின் கேட்டில் சிக்கியிருந்த மானை மீட்டனர்.

மானின் வயிற்றுப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. இதன்பின் மான் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது.

Advertisement