கார் விபத்தில் இருவர் பலி

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் மந்தையம்மன் கோயில் தெரு ராமு மகன் பிரதீப், இவருடைய நண்பர்கள் காமயகவுண்டன்பட்டி முத்துக்குமார், சந்திரன், சிவகங்கை பிரியதர்ஷன். இவர்கள் காமயகவுண்டன்பட்டியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர்.

திருமணம் முடிந்த பின் நால்வரும் சண்முகா நதி அணைக்கு சென்றனர். அங்கிருந்து புறப்பட்ட பின் பிரியதர்ஷன் காரை ஓட்டினார். கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தின் மீது மோதியது.

அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரதீப், முத்துக்குமார் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சந்திரன், பிரியதர்ஷன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement