டூவீலர்கள் மோதி விவசாயி பலி
எருமப்பட்டி:திருச்சி மாவட்டம், பச்சபெருமாள்பட்டி
அருகே, அரப்பூலிப்பட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 63; விவசாயி.
இவர் கடந்த, 25ல், எருமப்பட்டியில் இருந்து அரப்பூலிப்பட்டிக்கு
டூவீலரில் சென்றுகொண்டிருந்தார்.
பவித்திரம் புதுார் அருகே
எதிரே வந்த டூவீலர், இவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த
ராதாகிருஷ்ணனை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ
கல்லுாரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று ராதாகிருஷ்ணன்
உயிரிழந்தார். எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியை நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; லக்னோவில் அவசர தரையிறக்கம்
-
மத்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து; ஓய்வுபெற்ற அதிகாரியிடம் 8 மணிநேரம் விசாரணை
-
வெள்ளம் பாதித்த வாரணாசி; மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்ட பிரதமர் மோடி
-
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்; பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு மீது பாஜ எம்பி ராகவ் சத்தா குற்றச்சாட்டு
-
ஐகோர்ட்டில் தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தனித் தீர்மானம்; சட்டசபையில் நிறைவேறியது
-
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
Advertisement
Advertisement