இரும்பு உருக்கு தொழிற்சாலைக்குள் புகுந்து காப்பர் பிளேட் திருட முயன்ற 4 பேர் கைது
நாமக்கல்:இரும்பு உருக்கு தொழிற்சாலைக்குள் புகுந்து, காப்பர் பிளேட் திருட முயன்ற, நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் - மோகனுார் ரோடு, கே.கே.நகரை சேர்ந்தவர் நடராஜன், 65; இவர், நல்லுார் கிராமத்தில், 'ஏரோடெக் பெரோ அலாயிஸ்' என்ற இரும்பு உருக்கு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், ஒரு ஆண்டாக தொழிற்சாலையை நிறுத்தி வைத்துள்ளார். மேலும், தொழிற்சாலையை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டி, 10 'சிசிடிவி' கேமாராவும் பொருத்தி உள்ளார். அதில், இரண்டு கதவுகளில் மொபைல் போன் மூலம் அலாரம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:50 மணிக்கு, நடராஜனின் மொபைல் போனில் அலாரம் அடித்துள்ளது. அதிர்ச்சியடைந்தவர், 'சிசிடிவி' கேமராவை பார்த்துள்ளார். அவரது தொழிற்சாலையில், 30 முதல், 40 வயது மதிக்கத்தக்க ஐந்து பேர், எலக்ட்ரிக்கல் பேனல் போர்டில் உள்ள காப்பர் பிளேட்டை கழட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து தொழிற்சாலையின் உள்ளே சென்றார். அவரை பார்த்ததும், மர்ம நபர்கள் ஓட்டம் பிடித்தனர். அப்போது அவர்கள் கீழே விழுந்ததில், ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்களும் கீழே விழுந்து தப்பி ஓடியதில் காயமடைந்தனர்.
அவர்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து நாமக்கல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம், ஓமலுாரை சேர்ந்த யுவராஜ், 38, சின்ன திருப்பதி சண்முகம், 33, வடக்கு அம்மாபேட்டை தேவா, 28, மேச்சேரி கார்த்திக், 30, என்பது தெரியவந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடி தலைமறைவான சுப்புராஜ், மூர்த்தி ஆகிய இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர்.
மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை