ஐகோர்ட்டில் தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தனித் தீர்மானம்; சட்டசபையில் நிறைவேறியது
சென்னை: சென்னை ஐகோர்ட்டின் முதன்மையான மொழியாக தமிழை அங்கீகரிக்க கோரி, சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் முன்மொழிந்தார். இது குறித்து அவர் பேசியதாவது: மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மொழி என்று வந்துவிட்டால் நமக்குள் ஒரு வேகம் பிறக்கிறது. உலக அளவில் 9 கோடி பேரால் தமிழ் பேசப்படுகிறது.
உயிரோடும் உணர்வோடும் ஒன்றிணைந்தது என கருதுகிறோம்; சிறப்புமிக்க தமிழ் மொழியானது ஆட்சி, கல்வி, மாவட்ட நீதிமன்றங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அறிவிப்பது காலத்தின் கட்டாயம்; மாநிலத்தின் ஆட்சி மொழியை உயர்நீதிமன்ற நடவடிக்கையில் பயன்படுத்த அதிகாரம் வழங்க முடியும்.
ஐகோர்ட் தீர்ப்பு மற்றும் உத்தரவுகள் அனைத்தையும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தமிழில் மனுக்கள், ஆவணங்களை சமர்பிக்க உரிய நடைமுறை உருவாக்கப்பட வேண்டும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களுக்கு சட்டத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது. வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் எளிதாக புரியும். இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல.
தமிழ் மொழிக்கான சட்ட அங்கீகாரம் கேட்கும் கோரிக்கை. ஜனாதிபதியும், மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும். தமிழக சட்டசபை ஒருமனதாக இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். இந்த தீர்மானத்தை அனைத்து எம்எல்ஏக்களும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டுகிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
வரவேற்பு
முதல்வரின் தனித்தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றன; இதையடுத்து தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Usual diversion tactics like resolution against NEET , Hindi imposition ,Kachadeevu and devolution of financial power etc . Similar resolutions are so many for the last 50 years of Dravidian Era . Any use ??
நாளை சுப்ரிம்கோர்ட்டிலும் தமிழ் வேண்டும் என்று தீர்மானம் போடுவார்கள். தேசிய மொழிகளான ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழக்குகள் நிறைவேறும். கோட்டாவில் சட்டம் படித்தவருக்கு ஆங்கிலம் பேச தெரியாதெனில், அதற்கு ஹை கோர்ட் ஒன்றும் செய்ய முடியாது.
முதலில் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் எதிர் கட்சியினருக்கும் தமிழில் ஒரு நுழைவு தேர்வு நடத்த வேண்டும். அட முழுசா சொல்றதுக்கு முன்பே ஓடுகிறார்கள் பாருங்கள்....
முதலில் தமிழ்நாட்டு சட்டங்களையெல்லாம் வழக்கத்திலிருக்கும் தமிழிலேயே இயற்றப்படவேண்டும் .சட்டங்களை இயற்றுவது எல்லாமே மக்கள் அறிந்து நடைமுறைப்படுத்தவே .ஆங்கிலத்தில் இருப்பதால் மக்களுக்கும் சட்டங்கள் தெரிவதில்லை ,ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்களுக்கும் புரிந்து அறிந்து நடைமுறை படுத்துவதில்லை .உதாரணத்திற்கு அறநிலைய துறை சட்டம் .இந்த சட்டத்தில் எங்குமே அரசு ஹிந்து கோவில்க்ளை நிர்வகிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை .மாறாக சட்டம்பிரிவு 107 இல் அரசு கோவில்நிர்வாகங்களில் தலையிட சட்டத்தின் எந்த பிரிவிலும் அதிகாரம் இல்லையென்றே கூறப்பட்டிருக்கின்றது .ஹிந்து கோவில்க்ளை இல்லாத ஒரு சட்டத்தை இருப்பதாக எண்ணி அரசு நிர்வகித்துக்கொண்டிருக்கின்றது சட்ட அறியாமையால் .இதை பலமுறை முதல்வர் அலுவலகம் ,அறநிலையத்துறை அலுவலகம் ,சட்டத்துறை அலுவலகம் ,சட்ட ஆலோசகர் அலுவலகம் ,அறநிலையத்துறை அமைச்சர் எல்லோருக்கும் மின்னஞ்சல் அனுப்பியும் யாரிடமும் இருந்து பதில் இல்லை .தமிழகத்தில் நாட்டிலேயே சிறந்த திறமை வாய்ந்த வழக்கறிஞ்சர்கள் இருந்தும் இதை அறிந்து சீர்திருத்தவில்லை என்பது வருத்தமளிக்கின்றது .இதனால்த்தான் கோவிலகளின் சொத்துக்கள் களவாடப்படுகின்றது .கோவில்களை ஒட்டி தேவை இல்லாத வழக்குகளை சந்திக்கவேண்டி இருக்கின்றது .
முதலில் உங்கள் அமைச்சர்களுக்கு தமிழ் பேச கற்று கொடுங்கள்.
உங்க மரிய வில்சன் பேசுவாரா தமிழ் எதற்கு இந்த வீண் ஆர்ப்பாட்டம். ? அன்று மரிய வில்சன் தமிழை தரம் தாழ்த்தி பேசிய போதும் மறுநாளும் முதல்வர் வாயே திறக்க வில்லை. வீண் ஜம்பம் மக்களை ஏமாற்ற போடும் நாடகம்
எவரானாலும் உதலில் தம்மால் முடிந்த சின்னச் சின்ன செயல்களை முதலில் செய்து காட்டவேண்டும் பல்லாண்டுகளாக இழுபறியில் இருக்கும் "மெட்ராஸ் ஹை கோர்ட்" எனும் பெயரை "தமிழக உயர் நீதிமன்றம்" என்று எழுதப்படட்டும். தமிழக சட்டப்பேரவையில் இதை "தமிழக உயர் நீதிமன்றம்" என மாற்றக் கோரி தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது, எனினும், நாடாளுமன்றத்தில் சட்டம் திருத்தப்பட்டால் மட்டுமே பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றப்படும் என்று சொல்கிறார்கள்
What about Madras Medical College which is nothing to do with Central Government . Why students are against name change . Find the truth , it will be very interesting .
முதல்ல தமிழை ஒழுங்கா பேசுங்க ..
இரு வழக்கறிஞர்கள் ஒரு நீதிபதி மட்டும். மக்கள் இடை புக முடியாது. நீதிமன்றத்தில் மொழி பிரச்சனை எதற்கு? மனு தாரர், சாட்சி விசாரணை தமிழில். தீர்வு ஆங்கிலத்தில் இருந்தாலும் மொழி பெயர்க்க ஏராளமான வசதிகள். வெட்டி தீர்மானம். சாதி, மத, மொழி பிரச்சனை உருவாக்குவது தன் தேவையை பூர்த்தி செய்ய தான். தமிழ் பற்று இருந்தால் அரசு, தனியார், மத பள்ளியிலும் திருக்குறள், நாலடியார், அக நானூறு, புற நானூறு போன்ற தமிழ் நூல்களின் பாடல் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று தீர்மானம் போடுங்கள் பார்க்கலாம்.
நீங்கள் தமிழ் வளர்ப்பது வரவேற்க தக்கதுதான். அதற்கு முன்னால் உங்கள் அமைச்சர்களை சரியாக தமிழ் பேச சொல்லுங்கள்மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை