வெள்ளம் பாதித்த வாரணாசி; மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்ட பிரதமர் மோடி
வாரணாசி: தனது சொந்தத் தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர் கனமழை காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் முழங்கால் வரையில் மழைநீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, கங்கை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கங்கையில் வெள்ளம் அபாயக் கட்டத்தை தாண்டி செல்வதால், கரையோர மக்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மேலும், நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரதமரின் சொந்த தொகுதியான வாரணாசியில் வெள்ள பாதிப்பு குறித்து மாவட்ட கலெக்டர் சத்யேந்திர குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். நிவாரண முகாம்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறித்து விரிவான விவரங்களைக் கேட்டறிந்தார்.
அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தாமதமின்றி அனைத்து அவசர தேவைகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (2)
அப்பாவி - ,
03 செப்,2026 - 15:50 Report Abuse
யோகி யார்? 0
0
guna - ,
03 செப்,2026 - 22:33Report Abuse
அப்பாவிக்கு சோறு போடுவது யாரு 0
0
Reply
மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை
Advertisement
Advertisement