எல்.ஐ.சி., ஆண்டு விழா

மோகனுார்:மோகனுார் எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில், எல்.ஐ.சி., நிறுவனத்தின், 70ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.

கிளை மேலாளர் கனகராஜூ தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிர்வாக அதிகாரி அனந்தவள்ளி வரவேற்றார். ஓய்வு பெற்ற வளர்ச்சி அதிகாரி ரங்கசாமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, எல்.ஐ.சி.,யின் செயல்பாடு, அதன் பயன்கள் குறித்து விளக்கி பேசினார்.
நிறுவன துவக்க விழாவை முன்னிட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், வினோத்குமார், வளர்ச்சி அதிகாரி முருகன், முகவர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement