கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு

ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வருதன் மகன் கணபதி, 69; இவர், நேற்று அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் வழியாக நடந்து சென்றார்.


அப்போது எதிர்பாராதவிதமாக நிலத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் இல்லாததால், கணபதி பலத்த காயமடைந்து மேலே வர முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், கிணற்றில் முதியவர் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரர்கள், ஒரு மணிநேரம் போராடி, அவரை உயிருடன் மீட்டனர். தொடர்ந்து, முதலுதவி சிகிச்சை அளித்து, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Advertisement