சர்ச்சையில் மிதக்கும் 'ஆசிய' கப்பல் * சமாளிக்குமா ஜப்பான் நிர்வாகம்
டோக்கியோ: ஆசிய விளையாட்டு நட்சத்திரங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சொகுசுக் கப்பல், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டு, வரும் 19 முதல் அக். 4 வரை நடக்க உள்ளது. இதில் 17,000 பேர் பங்கேற்க உள்ளனர். வழக்கமாக வீரர்/வீராங்கனைகள் தங்குவதற்காக ஸ்பெஷலாக விளையாட்டு கிராமம் கட்டப்படும். போட்டிக்குப்பின் விற்கப்படும்.
ஆனால், செலவுகளை குறைக்கும் வகையில் ஆசிய விளையாட்டில் முதன் முறையாக 'கிராமம்' திட்டம் கைவிடப்பட்டது. மாறாக, இத்தாலியின் 'கோஸ்டா செரினா' என்ற பயணிகள் சொகுசு கப்பல் செப். 15 முதல் அக். 4 வரை நகோயா துறைமுகத்திற்கு வரவுள்ளது. இதில் 5000 பேர் தங்கலாம்.
மீதமுள்ளவர்கள் அருகிலுள்ள மரத்தால் ஆன கன்டெய்னர் வடிவ ஓட்டல்கள், தவிர, போட்டி நடக்கும் இடத்தில் இருந்து 100 கி.மீ., துாரத்திலும் என பல்வேறு பகுதிகளில் பரவலாக தங்க வைக்கப்பட உள்ளனர்.
சர்ச்சை ஏன்
போட்டியில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை முதலில் 15,000 பேர் என கணிக்கப்பட்டது. தற்போது 2000 பேர் அதிகரித்துள்ளதால் (11,000 நட்சத்திரங்கள், 6000 அதிகாரிகள்), பல்வேறு குழப்பம் ஏற்பட்டுள்ளது. தவிர, கிரிக்கெட் அணிகளுக்கு, மைதானத்தில் போதிய வசதியில்லை. தங்கும் ஓட்டல்கள் 20 கி.மீ., துாரத்தில் உள்ளன.
திறமை பாதிக்குமா
செலவுகளை குறைக்கும் வகையில் இப்படிச் செய்துள்ளனர் என்றாலும், அனைவரும் ஒரே இடத்தில் தங்கவைக்கப்படாதது, இட நெருக்கடியான அறைகள், சரியான போக்குவரத்து, போதுமான உணவு, மீண்டு வரத் தேவையான வசதிகள் இல்லாதபட்சத்தில், விளையாட்டு நட்சத்திரங்கள் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
துப்பாக்கிசுடுதல், வில்வித்தை வீரர், வீராங்கனைகளை, மிதந்து கொண்டிருக்கும் கப்பலில் தங்கவைப்பதற்கு, இந்தியா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
ஏனெனில், நிலையாக நின்று, துல்லியமாக செயல்படும் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு, உடல் சமநிலையில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றம் கூட, திறமை வெளிப்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
ஒருவேளை, ஜப்பான் நிர்வாகம் திறமையாக கையாண்டால், 'மிதக்கும் கிராமம்', தற்காலிக வீடுகள் திட்டம் வரும் காலங்களில் முன்மாதிரியாக அமையலாம்.
ரூ. 285 கோடி
'கோஸ்டா செரினா' கப்பலில் 14 தளங்கள், 557 பால்கனி அறைகள், எட்டு உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள், நீச்சல் குளங்கள் உள்ளன. 290 மீ., நீளம் கொண்டது. ஆசிய விளையாட்டு போட்டிக்காக இந்தக் கப்பல், தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான வாடகை ரூ. 285 கோடி.
மேலும்
-
டில்லியை நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு; லக்னோவில் அவசர தரையிறக்கம்
-
மத்திய அரசு குறித்து சர்ச்சை கருத்து; ஓய்வுபெற்ற அதிகாரியிடம் 8 மணிநேரம் விசாரணை
-
வெள்ளம் பாதித்த வாரணாசி; மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்ட பிரதமர் மோடி
-
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்; பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு மீது பாஜ எம்பி ராகவ் சத்தா குற்றச்சாட்டு
-
ஐகோர்ட்டில் தமிழை அங்கீகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தனித் தீர்மானம்; சட்டசபையில் நிறைவேறியது
-
சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு