8 மாவட்டத்தில் ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம்
சிவகங்கை: தமிழகத்தில் சென்னை, மதுரை, சிவகங்கை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்க ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதி அந்தஸ்திலான சிறப்பு நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பர். இது வரை அந்தந்த மாவட்டங்களில் முதன்மை மாவட்ட நீதிபதியே ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரித்தார்.
இனி மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளும், 2024க்கு பின் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளும் ஒருங்கிணைக்கப்படும். அவற்றின் மீதான விசாரணை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும். இச்சிறப்பு நீதிமன்றம் செப்.21 முதல் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சலுகைகள் ரத்து? பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு...: மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
-
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: சதம் விளாசினார் ஸ்மிருதி மந்தனா
-
இந்திய படையில் 768 பேர் * * ஆசிய விளையாட்டுக்கு...
-
9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
-
பி.சி.சி.ஐ., புதிய முடிவு
-
மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை
Advertisement
Advertisement