செப்.12ல் வெயிலுகந்த விநாயகருக்கு திருக்கல்யாணம்

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவையொட்டி செப்.12ல் திருக்கல்யாணம் நடக்கிறது.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற வெயிலுகந்த விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கிறது.

நடப்பாண்டில் செப்.5 காலை 7:45 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற உள்ளது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது.

செப்.12ல் விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் திருக்கல்யாணம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து மறுநாள் தேரோட்டம் நடக்கிறது.

செப்.14ல் நடைபெறும் சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.

சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு முகூர்த்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை தரிசித்த னர்.

Advertisement