'தொழில்துறை புத்தாக்க சவால்' அறிமுகம்
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ஏ.ஐ.சி.-பி.இ.சி., பவுண்டேஷன் சார்பில் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் கண்டறியும், 'புதுச்சேரி தொழில்துறை புத்தாக்க சவால்' 'ஸ்டார்ட் அப் ரெண்டெவூ' அறிமுக நிகழ்ச்சி தனியார் ஓட்டலில் நடந்தது.
புதுச்சேரி தொழில் மற்றும் வர்த்தகத் துறைச் செயலர் விக்ராந்த்ராஜா பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில், சி.ஐ.ஐ. புதுச்சேரி பிரிவின் தலைவர் நடராஜன், மனாடெக் எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் கலைச்செல்வன் மனநாதன், ஏ.ஐ.சி., இ.சி.எப் நிர்வாக இயக்குநர் சுந்தரமூர்த்தி, தலைமைச் செயல் அதிகாரி விஷ்ணு வரதன், தலைமை இயக்க அதிகாரி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், அரசு செயலர் விக்ராந்த் ராஜா, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துவதைப் போலவே, தங்கள் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துவதிலும், பிராண்டை உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வசதியாக்க மையம் மற்றும் கரசூர் தொழில்துறை நிலத் தொகுப்பு உள்ளிட்ட எளிதாகத் தொழில் நிறுவனங்களை புதுச்சேரியில் துவங்குவதற்கான தேவையற்ற கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அரசின் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
ஏ.ஐ.சி.-பி.இ.சி.எப்., தலைமைச் செயல் அதிகாரி விஷ்ணு வரதன், தொழில்துறை புத்தாக்க சவால் 4 கட்ட செயல்முறையாக, தொழில் துறையினர் தங்களின் பிரச்னைகளை பதிவு செய்து, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் மாணவர் கண்டுபிடிப்பாளர்கள் பிரச்னைகளுக்கான தீர்வுகளை வழங்க நேரடியாக விண்ணப் பிக்கலாம்.
இண்டஸ்ட்ரி 5.0, இன்டர்நெட் ஆப் திங்ஸ், ரோபோட்டிக்ஸ், என்டர்பிரைஸ் ஏ.ஐ, ஆக்மென்டட் அண்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி, டிஜிட்டல் ட்வின் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகிய ஏழு புத்தாக்கப் பிரிவுகளின் கீழ் சவால்கள் நடக்கிறது.
தேர்ந்தெடுக்கப்படும் அணிகளுக்கு 6 மாதங்களுக்கு ஏஐசி-பிஇசி பவுண்டேஷனில் வழிகாட்டல் மற்றும் தயாரிப்பை உருவாக்கவும், மேம்படுத்தவும் ஆதரவு வழங்கப்படும். மேலும் கண்டறியப்பட்ட தீர்வு தொழில்துறையில் முன்னோடி சோதனைக்கு உட்படுத்தப்படும்.
ஏ.ஐ.சி-.பி.இ.சி.எப்., நிறுவனம் புதுச்சேரியில் தொடக்க நிலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களுக்கு நிதியளித்துள்ளது.
மேலும்
-
இந்தியாவில் பெண்கள் சாம்பியன்ஸ் டிராபி
-
தமிழக வீரர் மனோஜ் 'தங்கம்' * இந்திய தடகள ஈட்டி எறிதலில்...
-
காய்கறி விற்கும் 'த்ரோ பால்' வீரர்
-
பட்டா வழங்காததால் பெண் தீக்குளிக்க முயற்சி: உளுந்துார்பேட்டையில் பரபரப்பு
-
பண்ருட்டி அருகே இருதரப்பு மோதல் 14 பேர் மீது வழக்கு : 2 பேர் கைது
-
மதுரையில் 13 பேருக்குமாநில நல்லாசிரியர் விருது