பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்பதே கிடையாது; சொல்கிறார் புடின்
மாஸ்கோ: 'உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெற்று பெற்று வருகிறது. பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்பதே கிடையாது,' என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடனான போர் குறித்து அவர் கூறியதாவது; உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. உக்ரைன் படையினர் மீது எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. எதிரிகள் விரைவில் சிதைந்து போவார்கள். பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிழக்கு உக்ரைனின் டொனெட்ச்ஸ்க் பகுதியில் 270 சதுர கி.மீ., பரப்பளவைக் கைப்பற்றியுள்ளோம். ஸ்லோவியன்ஸ்க் மற்றும் கிரமாடஸ்க் நகரங்களை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன. உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது பயங்கர தாக்குதல்களை நடத்த ரஷ்யா தயாராகி வருகிறது.
உக்ரைனுடனான போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா எப்போதும் தயாராகவே இருக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் எங்கள் தோட்டாக்கள் பேசும். புரியலையா? எங்கள் தோட்டாக்கள் அவர்களை சுட்டுத்தள்ளும் என்று கூறுகிறேன்.