பரிசளிப்பு விழா

இளையான்குடி:இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் பத்து மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் 100 சதவீத தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பரிசளிப்பு விழா தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான் தலைமையில் நடந்தது.பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் முன்னிலை வகித்தார்.

தலைமை ஆசிரியர் முகம்மது இல்யாஸ் வரவேற்றார்.முன்னாள் மாணவரும்,தொழிலதிபருமான முகம்மது உள்ளிட்ட பலர் மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கினார்.

சாலையூர் மதரஸத்துல் மஜிது நிறுவனர் ஹமீதாவூது, மதுரை காமராஜர் பல்கலை

கழக முன்னாள் கபடி அணி கேப்டன் அயூப்கான் மற்றும் ஆட்சி குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் சிக்கந்தர் சுலைமான் நன்றி கூறினார்.

Advertisement